2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள், சுனாமி ஒத்திகை நடவடிக்கைகளுக்காக நாளை (05) இயங்கச் செய்யப்படவுள்ளதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், சுனாமி முன்னெச்சரிக்கைக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ள ஏழு இடங்களில், சுனாமி ஒத்திகை நடவடிக்கைகளுக்காக, அக்கோபுரங்கள் இயங்கச் செய்யவுள்ளன. காலை 09 மணி தொடக்கம் 10 மணிவரை இந்த நடவடிக்கை இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, ஏறாவூர்பற்று, வாழைச்சேனை, வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கரையோரப்பகுதிகளில், இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் அவர் தெரிவித்தார்.
இதே நேரம், சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடவடிக்கை அம்பாறை, காலி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாரியளவில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .