2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களை அச்சுறுத்தியமை கவலையளிக்கிறது’

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

பொதுமக்களிடையே, கொரோனா தொற்று என பொய்யான வதந்திகளைப் பரப்பி மக்களை பீதியடைய செய்தமை கவலையளிப்பதாக, மட்டு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். 

தன்னை பழிவாங்கும் நோக்கிலேயே, இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் உண்மை என்ன என்பதை, மக்கள் தற்போது உணர்ந்திருப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மா.உதயகுமார், கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை, 14 நாள்கள் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

அத்துடன், அவருடன் தொடர்பை மேற்கொண்டனர் என்றச் சந்தேகத்தின் பேரில், 40 குடும்பங்களும் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில், நேற்று(31) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  
தன்னுடைய நண்பர் ஒருவர், தன்னைச் சந்தித்தபோது அவருடன் நெருக்கமாக பழகியதன் காரணமாக, தான் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதேபோன்று 40 குடும்பங்களும் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தால்; கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

தங்களது சுய தனிமைப்படுத்தல் காலப்பகுதி, மார்ச் மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவுற்றதாகவும் அதில் தங்களுக்கு எந்தவொரு நோயத்; தொற்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதற்கான கடிதங்களும் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு உதவிகளை வழங்கிய சுகாதார அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள, அரச அதிகாரிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அத்துடன், தங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்கள், அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியவர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான துன்பியல் காலத்தில் சில மனிதத்தன்மை அற்றவர்கள் தமது குறுகிய அரசியல் இலாபம் கருதி தன்னை  பழிவாங்கும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே, பொய்யான வதந்திகளை பரப்பி பீதியடைய செய்தமையை அவதானித்ததாகவும் தெரிவித்தாhர்.

அவர்களது பொய்யான முகங்களை, தங்களுடைய பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நினைப்பதாகவும்  இந்தத் துன்பியல் காலத்தில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .