2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலிஸாரினால் குடியிருப்பாளர் விவரங்கள் சேகரிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற்கொண்டு,  ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக அந்தந்தப் பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் விநியோகிக்கப்படும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள தகவல் திரட்டுப் படிவங்களுக்கமைவாக, ஒவ்வொரு குடியிருப்பாளர்களும் தத்தமது வீட்டில் வசிப்போரின் விவரங்களை, வெகு விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளினூடாகவும் இந்த அறிவித்தல்கள் அவ்வப்போது விடுக்கப்படுகின்றன.

விநியோகிக்கப்பட்டுள்ள குடும்ப விவர சேகரிப்பு படிவத்தில், வீட்டில் குடியிருக்கும் ஒவ்வொருவரினதும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

முழுப்பெயர், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம், நிரந்தர முகவரி, வீட்டில் தங்குவதற்கான காரணம், வீட்டில் தங்கிருப்பதற்கு எண்ணியிருக்கும் கால அளவு, பிரதான குடியிருப்பாளரோடு உள்ள உறவு முறை உள்ளிட்ட விவரங்கள் இந்தப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.

இந்த விவர சேகரிப்பு முஸ்லிம் குடியிருப்பாளர் வதியும் பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்று வருவது  குறிப்பிடத்தக்கது.

ஒரே விவரங்கள் அடங்கிய நான்கு பிரதிகளில் ஒன்றை, பொலிஸ் நிலையத்திலும் மற்றொன்றை குடியிருப்பாளர் தம் வசமும், இன்னொன்றை அந்தப் பகுதி பள்ளிவாசலிலும், நான்காவது பிரதியை குறிப்பிட்ட பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவையளரிடமும் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .