2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘பொலிஸ் - பொதுமக்கள் உறவு நெருக்கமடைய வேண்டும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க வேண்டுமாயின், பொலிஸ் - பொதுமக்கள் உறவு பலப்படுத்தப்பட்டு, நெருக்கமடைய வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மெண்டிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை, வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தலைமையில் இன்று (13) நடைபெற்றது.

இப்பரிசோதனை நிகழ்வின்போது, மட்டக்களப்பு மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ் கலந்துகொண்டு,  ஆயுதங்களினதும் வாகனங்களினதும் பயன்பாடு, பொலிஸாரின் சேம நலன்கள்  குறித்தும் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பொலிஸார் மத்தியில் உரையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிக்கையில், பொலிஸ் சேவை, முன்னைய காலங்களைவிட தற்போது கிராமங்கள், நகரங்கள் என்று மக்கள் மத்தியில் சென்றுள்ளது. இதனால் அனைத்து மக்களுக்கும் உயர்வான சேவையை வழங்கக் கூடியதாக உள்ளதென்றார்.

எனினும், மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் உள்ள தொடர்புகள் அதிகரித்து, இடைவெளிகள் குறையும்போது, நாட்டில் ஏற்படும் குற்றச்செயல்களை இலகுவில் தடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .