2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் பாடசாலை மாணவன் கைது; இருவர் தப்பியோட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வலி நிவாரண மாத்திரை என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கென முச்சக்கர வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை, ஏறாவூர்ப் பொலிஸார் நேற்று (22) மாலை கைப்பற்றியுள்ளனர்.

அந்த முச்சக்கர வண்டியில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் சாரதியும் மற்றுமொரு நபரும் தப்பியோடியுள்ளனரெனவும் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக்க ஆர் பீரிஸ் தெரிவித்தார்.

இந்த முச்சக்கரவண்டியையும் முச்சக்கரவண்டியில் காணப்பட்ட பொதியொன்றில் இருந்து ​ 800 போதை மாத்திரைகளையும் ஏறாவூர்ப் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த மாத்திரைகள் ஒவ்வொன்றும் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள 18 வயதுடைய மாணவன், ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் விஞ்ஞானப் பிரிவில் கற்பதாகக் கூறியுள்ளார்.

செங்கலடி பிரதேசத்தில் வீதிப் பாதுகாப்புக் கடமையிலிருந்த ஏறாவூர்ப் பொலிஸார், மட்டக்களப்பு நகரிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது, இதில் இந்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .