2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும் வரை ஊரின் சூழலில் மாற்றம் ஏற்படாது’

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷாரா

மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும் வரை எமது ஊரின் சூழலில் மாற்றம் ஏற்படாதெனத் தெரிவித்த ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் ஐ.அப்துல் வாசித், “எமது ஊரைப் பசுமையாக்கும் திட்டத்தில், அரச உத்தியோகத்தர்கள், சமூக நலன் விரும்பிகள் ஒத்துழைப்பு நல்க முன் வரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

"ஊரைப் பசுமையாக்குவோம்" எனும் வேலைத் திட்டத்தின் கீழ், ஏறாவூர் பிரதேசத்தைப் பசுமையாக்கும் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல், ஏறாவூர் நகர சபையின் கூட்ட மண்டபத்தில் நேற்று (10)இடம்பெற்றது.

இதன்​போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திண்மக்கழிவுகளை, உக்கும் கழிவு, உக்காத கழிவு என்று தரம் பிரித்து பெற்றுக்கொள்ளாமல் திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கு, எமது திண்மக்கழிவுப் பிரிவினர் எடுத்துச் செல்லப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்

“அதில் எமது ஊழியர்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கியும் வந்துள்ளனர். காரணம் மக்களிடத்தில் இன்னும் தெளிவான பூரணத்துவம் இல்லாததே ஆகும்.

“எதிர்காலத்தில் திண்மக்கழிவுகளை முறையாக சேகரித்தல், அகற்றுதல் மற்றும் தரம்பிரித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல் மிக அவசியம். இதற்கான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டதுடன், சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .