2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மங்களகம், உறுகாமம், வடிச்சல் ஆகிய பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மங்களகம, உறுகாமம் புதூர் மற்றும் வடிச்சல் ஆகிய பிரதேசங்கள், அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்கென, குறித்த அமைச்சின் ஊடாக, 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மங்களகம பிரதேசத்தின் வீதி மற்றும் பல்தேவைக் கட்டடம் அமைப்பதற்கென 10 மில்லியன் ரூபாயும் உறுகாமம் புதூர் மற்றும் வடிச்சல் போன்ற பிரதேசங்களின் வீதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு 10 மில்லியன் ரூபாயும் செலவிடப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அபிவிருத்திகளின் அங்குரார்ப்பண நிகழ்வுகள், நாளை மறுதினம் (15) இடம்பெறவுள்ளன.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளருமான எம்.எஸ்.சுபைரின் அழைப்பின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க, கிழக்கு மாகாண ஆளுநர், குறித்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X