2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் புதிய ஆய்வுகூடம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கட்டட நிர்மாணங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம், விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மண், மணல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்துக்கானபுதிய கட்டடம், திறந்து வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப்புதிய ஆய்வுகூடம்அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பரிசோதனையூடாக விவசாய மண்ணின் தரத்தை பரிசோதனை செய்து, அந்நிலத்துக்குப்பொருத்தமாக பயிர்வகையை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப்பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் பிரதேச விவசாயிகளுக்கு இதுவொரு வரப்பிரசாதமாக அமையுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இந்த ஆய்வுகூடம் மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .