2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் இன்று (21) பகல் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் அதிகாரிகளினால் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் வாக்கெடுப்பு மூலம் புதிய நிருவாகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டோர் சார்பில் இருவரும், பெண்கள் சார்பில் இருவரும் உட்பட மேலதிகமாக ஐவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X