2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மட்டக்களப்பு மக்கள் முன்னிலை வகிக்கலாம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி, நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மக்கள் முன்னிலை வகிக்க முடியுமென, தேசிய சமாதானப் பேரவை நம்புவதாக அப்பேரவையின் திட்ட உதவி முகாமையாளர் ரஷிகா செனவிரட்ன  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் “இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் கருத்திட்டம் தொடர்பாக அவர் விவரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (22) அவர் தெரிவிக்கையில், “இலங்கை தேசிய சமாதானப் பேரவை இனமுறுகலையும் அமைதியின்மையையும் தணிப்பதற்காகவும் நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானத்தைத் தோற்றுவிப்பதற்காகவும் இலங்கை முழுவதும் உருவாக்கப்பட்ட மாவட்ட சர்வமத செயற்பாட்டுக் குழுக்கள் ஊடாக பரந்துபட்ட பணிகளைச் செய்து வருகின்றது” என்றார்.

அந்த வகையில், இன நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி, நடைமுறைப்படுத்திக் காட்டுவதில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையும் தன்னாலான பங்களிப்பை ஆற்றமுடியுமென, இலங்கை தேசிய சமாதானப் பேரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X