2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையில் மேலும் நால்வருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மாநகர சபையின் கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மாநகர சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 93 பேருக்கு, நேற்று (24) பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், மேலும் நான்கு உத்தியோகத்தர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நேரடியாக தொடர்புகளை பேணிய மாநகர சபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

திருமண நிகழ்வொன்றில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அதில் பங்குகொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதான கணக்காளருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .