2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வுகளில் நிலையியற்குழுக்கள் தெரிவு

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபையின் மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவது அமர்வு, நேற்று (16) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இச்சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், உதவி ஆணையாளர், மாநகர சபைச் செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இறைவணக்கத்துடன் தொடர்ந்து, தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வமர்வில் சபையின் மாதாந்த அமர்வுக்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டதுடன், நிலையியற்குழு மற்றும் விசேட குழுக்களுக்கான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2 ஆவது அமர்வு நடைபெற்ற போதே இந்த நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டன. இரண்டாவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் ரி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதிமேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டாவது அமர்வின் போது மட்டக்களப்பு மாநகர சபையின் மாதார்ந்த அமர்வுகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இறுதி வியாழக்கிழமைகளில் சபை அமைர்வினை நடத்துவதாக சபையினால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான திகதிகளும் நிர்ணயிக்கப்பட்டன.

நிலையியற் குழுக்களான நிதிக் குழுவிற்கு மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் உட்பட 05 உறுப்பினர்களும், சுகாதாரம் தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், வேலைகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், நூலகம் மற்றும் மக்கள் பயன்பாடு தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

முதல்வரினால் உருவாக்கப்பட்ட விசேட குழுக்களான காணி மற்றும் மாநகரசபைச் சொத்துக்கள் தொடர்பிலான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், கலை கலாச்சாரம் தொடர்பான குழுவிற்கு 06 உறுப்பினர்களும், விளையாட்டு மற்றும் சிறுவர் களியாட்டம் தொடர்பான குழுவிற்கு 08 உறுப்பினர்களும், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான குழுவிற்கு 08 உறுப்பினர்களும் சபையில் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .