2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 இலட்சத்து 52,500 ரூபாய் கட்டுப்பணம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணமாக 69 இலட்சத்து 52,500 ரூபாய் பணம், மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுப்பணத்தை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை ஏறாவூர் மற்றும் காத்தான்குடி நகர சபைகள் உள்ளடங்களாக 9 பிரதேச சபைகளுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் செலுத்தியுள்ளன.

17 அரசியல் கட்சிகளும் 28 சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் 21 சுயேட்சைக்குழுக்களே வேட்புமனுப்பத்திரங்களை தாக்கல் செய்திருந்தன.

இந்தக் கட்டுப்பணத்தினை தேர்தலில் முடிந்தவுடன் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 5 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை பெற்றிருந்தால் வட்டார வேட்பாளரின் கட்டுப்பணத்தையும் முழு சபைக்காக 5 சதவீதத்துக்கு மேல் வாக்குகளை ஓர் அரசியல் கட்சியோ அல்லது சயேட்சைக்குழுவோ பெற்றிருந்தால், அந்த வேட்பாளர் பட்டியலில் மேலதிக வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தைப் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அரசியல் கட்சியொன்றின் ஒரு வேட்பாளருக்கு 1,500 ரூபாயும் சுயேட்சைக்குழுவின் வேட்பாளர் ஒருவருக்கு 5,000 ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .