2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,766 பேருக்கு போசாக்கு அச்சுறுத்தல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 9,766 பேர், போசாக்கு அச்சுறுத்தலுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போசாக்கு அச்சுறுத்தலுக்குட்பட்ட வீட்டலகுகளை 3 வகையாகப் பிரிக்கப்பட்டு தரவுகள் கணணி மயப்படுத்தப்பட்டு, ஜனாதிபதி செயலகம் இதனை நேரடியாக மேற்பார்வை செய்து வருகின்றது.

5 வயக்குட்பட்ட போசாக்கு அச்சுறுத்தலுக்குட்பட்ட 5,905 சிறுவர்களும், 1,455 போசாக்கு அச்சுறுத்தலுக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களும், 2,406 போசாக்கு அச்சுறுத்தலுக்குட்பட்ட முன் கர்ப்பிணிப்பருவப் பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் விவரங்கள் கணணிமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கான குடும்பப் பதிவு அட்டைகளும் விநியோகிக்கப்பட்டு, இவர்களை மந்த போசாக்கிலிருந்து மீட்டெடுப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலகத்தால்  கடந்த ஆண்டு இந்த செயற்றிட்டத்துக்காக 2 மில்லியன் நிதியொதுக்கப்பட்டு, 14 பிரதேச செயலகங்களினாலும் மாவட்ட செயலகத்தாலும் விழிப்புணர்வு பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவர்களை மந்த போசாக்கிலிருந்து மீட்டெடுப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

“ஒரு தேகாரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவது, நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய தேவையாகும் மக்களின் சுகவாழ்வுக்கு போசாக்கு முக்கியமானது.

“முதலில் நாம் மாவட்ட செயலக மட்டத்தில் போசாக்கான உணவுகளை கூட்டங்களின் போது வழங்க நடவடிக்கை எடுத்து சமூகத்துக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X