2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘ஏழு சதவீதத்தால் வறுமை குறைந்துள்ளது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 சதவீதத்தால் வறுமை குறைந்துள்ளதாக, கடற்றொழில் நீரியல் வழங்கள் கிராமியப் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

காத்தான்குடியில் சுய தொழிலில் ஈடுபடும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாரதார உபகரணங்களை வழங்கி வைக்கும் வைபவம், காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (27)  நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 32 குடும்பங்களுக்கு வாழ்வாரதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்காக 3 மில்லியன் ரூபாயை, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர், மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை, தமது அமைச்சு, 7 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பாரபட்சமில்லாமல் தமது அமைச்சால் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .