2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘போசாக்கு மேம்பாட்டுத் திட்டம்’

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின்  போசாக்கு ஒருங்கிணைப்பு பிரிவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட  முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  போசாக்கு மேம்மபாட்டு செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (14) நடைபெற்றது.

இச்செயலமர்வு, முன்பள்ளி சிறார்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு  மாவட்ட 14  பிரதேச செயலக பிரிவிலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளில்  கடமையாற்றுகின்ற  80 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி.முரளிதரன் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலக  மேலதிக காணி அரசாங்க அதிபர் திருமதி  நவருபரஞ்சனி முகுந்தன் தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.

இதில், மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ.நவேஸ்வரன், வளவாளர்களாக சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுபோஜனி ஜனகன், மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவை அலுவலக அதிகாரி வைத்தியர் அச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .