2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மட்டு. மேற்கு கல்வி வலயம் ஆசிரியர்கள் இன்றித் திணருகிறது’

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

.திவாகரன்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து 102 ஆசிரியர்கள் வெளி வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளனர்.

அதேவேளை, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு 28 ஆசிரியர்களே இடமாற்றம் பெற்று வருகைதந்து தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

இதனால் பல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றனவென, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகில கனகசூரியம் தெரிவித்தார்.

வவுணதீவு, பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (17)இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஆரம்பப்பிரிவுக்கு மாத்திரம் 68 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளனவென்றும் அத்துடன் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

நகரை அண்டிய பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளபோதிலும், கல்வியில் பின்தங்கியிருக்கின்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு ஆசிரியர்கள் நியமிக்காமை  பெரும் கவலைக்குரிய விடயமாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .