2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எஸ்.சபேசன்   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான போரதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராணமடு, பூச்சிக்கூடு மூங்கிலாற்றில்  தொடர்ச்சியாக மணல் அகழப்படுவதைக் கண்டித்தும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரியும்  அப்பகுதி  பிரதேச மக்களால்  இன்று (31) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வேறு பிரதேசங்களிலிருந்து கனரக, உழவு இயந்திரங்களில் ஒருசிலர் பூச்சிக்கூடு மூங்கிலாற்றிலிருந்து மணலைஅகழ்ந்து, ராணமடுப் பகுதியில் அதை சேமித்துவைத்து வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதைக் கண்டித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, “மண்கொள்ளைக்குத் துணைபோகாதே”, “சிலரது சுகபோகத்துக்கு எமது வளத்தையும் வாழ்வையும் சுரண்டாதே”, “தாய் மண்ணை, வெளி மாவட்டங்களுக்கு விற்காதே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை தாங்கியவாறு,  ராணமடு பாலத்துக்கு அருகில் ஆரம்பித்து, மண் அகழ்வு இடம்பெறும் பூச்சிக்கூடு மூங்கிலாறு வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

மேற்படி மணல் அகழ்வைத் தடுக்குமாறு, பலதடவைகள் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதனைத் தடுப்பதற்கு எவரும் முன்வரவில்லையெனவும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கவேண்டாம் எனக் கேட்டபோது மேல் இடத்திலிருந்து வந்த கட்டளையால் தான் அனுமதி வழங்குவதாகவும்   பிரதேச செயலாளர்  தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .