2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘மத்திய அரசு, மாகாணங்களுக்குள்ள அதிகாரத்தை மீளப்பறிக்கிறது’

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மாகாணங்களுக்குள்ள அதிகாரத்தை, மத்திய அரசு மீளப்பறிப்பதாக, குற்றஞ்சாட்டிய கிழக்கு மாகாண சபை முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இதற்காக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை, ஜனாதிபதியும் பிரதமரும் மீளாய்வு செய்ய வேண்டுமென, பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில், மாகாணசபை முறைமைகளை விரும்பியோ, விரும்பாமலோ ஏனோ தானோ என அமுல்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளன என்றார்.

மக்கள் பிரதிநிதிகளின்றி, ஆளுநரின் கீழ் நீண்டகாலமாக கிழக்கு மாகாண சபை செயற்படுவதன் காரணமாக, அதிகாரங்களை அமுல்படுத்த முடியாதெனக் கூறிய அவர், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உள்ள நிர்வாகக் கட்டமைப்புக்கு, மத்திய அரசாங்கம் நிதியொதுக்கீடு செய்யாமல் உள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, சமூகசேவை போன்றவற்றுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, மத்திய அரசாங்கத்தின் அமைச்சுகள், அமைச்சர்கள், நடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக, புதுப்புதுப் பெயருடன் நிதியை ஒதுக்கீடு செய்து, மாகாணங்களுக்குள் மத்திய அரசின் ஆளுகைகளை நிலை நாட்டுவதற்கு முயற்சிப்பதென்பது, ஒருகையால் வழங்கப்பட்ட அதிகாரத்தை மறு கையால் பறிப்பதற்கு சமனானவையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு, மாகாணத்துக்கான அதிகாரங்களை இல்லாமலாக்கும் செயற்றிட்டங்களை நிறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .