2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மனித – யானை மோதல்: 12 பேர் பலியாகினர்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 13 மாதங்களில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு, 12 ​பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதே காலப் பகுதியில் 10 யானைகளும்  இறந்துள்ளன எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் என்.சுரேஸகுமார் தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன என சுட்டிக்காட்டிய அவர், மேற்படி காலப்பகுதியில் 35,550 யானை வெடிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, யானைகளை விரட்ட  அவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

2019ஆம் ஆண்டு யானைகளால் தாக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவ்வாண்டு முதல் மாதத்தில் இருவர் யானைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த மனித - யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு, யானைகள் வரும் வீதிகளில் மின்விளக்குகள் பொருத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X