2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘மழையால் பாதிக்கப்பட்ட வயல்கள் மதிப்பீடு’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பில் சில நாள்களாகப் பெய்துவரும் கன மழையால் நெல் வயல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய மதிப்பீடுகள் நடைபெற்று வருவதாக, மட்டக்களப்பு விவசாய பிரதிப் பணிப்பாளர் விஸ்வநாதன் பேரின்பராஜா தெரிவித்தார்.

இந்த மதிப்பீட்டு விவரங்களை அடுத்தவாரம் முழுமையாக அறிந்து கொள்ள முடியுமென்றும்,  அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சுமார் 60 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்து. அவற்றில் தாழ் நிலப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

படுவான்கரை விவசாயப் பிரதேசமும் கிரான் விவசாயப் பிரதேசமும் வெள்ளத்தால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .