2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மஹிந்த ஆட்சி காலத்தில் வேட்டையாடிய வேட்டைக்கார்கள் யார்?’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புத்திஜீவிகள், ஊடகவியாளர்கள், கல்விமான்களை அழித்துவிட்டு, கைகட்டி மௌனித்து முட்டுக்காலில் வைக்கக்கூடிய சமூகத்தை, கிழக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டும். இதற்கு எதிராகப் பேசினால் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற எழுத்தப்படாத சட்டம், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்தது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நான்காம் குறிச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடரந்து உரையாற்றுகையில்,

“மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் எவலாளர்களாக இருந்தவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு, ஊடகவியலாளர் நடேசன், நிர்மலராஜன், விரிவுரையாளர் தம்பையா, உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட பல புத்திஜீவிகள், ஊடகவியாளர்கள் கல்விமான்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதை வேட்டையாடிய வேட்டைக்கார்கள் யார்?

“இவர்களது பிரதிநிதிகள் வாக்குகேட்டு வந்தால், நீங்கள் கடத்தியவர்கள் காணாமல் ஆக்கியவர்களை நேரில் கொண்டுவந்தால் உங்களுக்கு ஆதரவு வழங்குவோம் எனக் கூறவேண்டும்.

“தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுகின்றவர்கள் சோரம் போகாத கட்சியிலுள்ளவர்கள், கொள்கையுடன் செயற்படுபவர்கள், இலஞ்ச ஊழலில் அகப்படாதவர்கள், மக்களின் உரிமையையும் அபிவிருத்தியையும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .