2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போட ’திரைமறைவு முயற்சிகள்’

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

 

மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் திரைமறைவு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பில், நேற்று (27) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டோம் - நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொக்கரிப்பவர்கள், மக்களின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில், மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடச் செய்யும் திரைமறைவு முயற்சிகளை மேற்கொள்ள முனைகின்றனரெனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனொரு அம்சமே, சகல மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டுமென்ற அரசாங்கத்தின் அறிவிப்பென்றும் கடந்த காலத்தில், நல்;லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஆட்சியின்போது எவ்வாறு தேர்தல்கள் தள்ளிப்போடப்பட்டனவோ  அதே பாணியில், புதிய அரசாங்கமும் செயற்பட முன்வந்;துள்ளதா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ஆறு மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் தேர்தல் பிற்போடப்பட்டு உள்ளதென்றும் மேலும் மூன்று மாகாண சபைகளின்; ஆட்சிக் காலம், அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவடைய உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் முதலமைச்சர்,  உடனடியாக அந்த மூன்று சபைகளின் ஆட்சியைகளையும் கலைக்க முடியாதென்றும் அப்படிச் செய்வது, ஜனநாயக விரோதம் என்றே பொருள் கொள்ளப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எல்லா சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது நிச்சயமாக காலதாமதம் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றும் எனவே, கலைக்கப்பட்டுள்ள ஆறு மாகாண சபைகளுக்குமான தேர்தலை காலதாமதமின்றி நடத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள நஸீர் அஹமட், தவறும் பட்சத்தில், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை வெற்றெடுப்பதற்கான போராட்டத்தில் சகல வழிகளை நாடவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X