2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாசி பொதி செய்யும் தொழிற்சாலை முற்றுகை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 07 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் மனித பாவனைக்குதவாத 184 கிலோகிராம் மாசி மற்றும் காலாவதியான சுவையூட்டிகளை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நேற்று (06) கைப்பற்றியுள்ளனர்.

ஆரையம்பதி வடக்கு எல்லையிலுள்ள வீடொன்றிலேயே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு சோதனைக்காக குறித்த வீட்டுக்குச் சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அங்கு டெங்கு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, அவ்வீட்டில் சட் விரோதமாக மாசி பொதி செய்யும் நடடிவக்கை, பொதுச் சுகாதார பரிசோதர்களுக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இந்த வீட்டிலிருந்த மாசி மற்றும் அதற்குக் கலக்கும் சுவையூட்டி என்பவற்றைப் பரிசோதானை செய்த போது, குறித்த சுவையூட்டி காலாவதியான சுவையூட்டி எனத் தெரியவந்தது.

இதன்போது, 20 களன் சுவையூட்டிகளைக் கைப்பற்றியதுடன், இங்கு பொதி செய்வதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 184 கிலோகிராம் அடங்கிய மாசி மூட்டைகளையும் கைப்பற்றினர்.

இந்த மாசி, மனித பாவனைக்கு உகந்ததா என்பதைக் கண்டறிய கொழும்பிலுள்ள உணவுப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பவுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். அதுவரை குறித்த மாசி மூட்டைகள், சுகாதார அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவற்றின் உரிமையாளருக்கு எதிராக காலாவதியான சுவையூட்டி வைத்திருந்தமைக்காக, நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X