2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மாஞ்சோலை, பதுரியா பிரதேச எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டாவடி பிரதேச சபை பிரிவில் மாஞ்சோலை, பதுரியா பிரதேசத்திலே இருக்கின்ற பெரியதொரு எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

ஓட்டமாவடியில் நேற்று (13) இரவு இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

“எல்லை பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும் போது, சட்டவிரோதமாக மதில் ஒன்று கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அது தொடர்பாக இந்த பிரதேசத்தில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதையும் செய்யாமல் இருக்கும் நிலவரத்தையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

“மாஞ்சோலை, பதுரியா பிரதேசத்திலே தொழிற்சாலைகளை அமைத்து, வருமானத்தை ஈட்டக்கூடிய நிலையை உருவாக்குவதற்கும் மீறாவோடை பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்து, வியாபார மத்திய நிலையமாக மாற்றுவதற்கும் மக்கள் ஆணை வேண்டும்.

“ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலுள்ள காணிப்பிரச்சினை தொடர்பாகவும் பிரதேசத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்ற நிலமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, இப்பிரதேச்த்தில் மாற்றமொன்று தேவை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .