2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீராவோடை வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக, மீராவோடை வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வைத்தியர், நாளை (01) தொடக்கம் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளையேற்று, வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், அரசாங்க வைத்தியர் அதிகாரிகள் சங்கம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கே.நவரெட்ணராஜா ஆகியோருக்கு, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், ஊர் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .