2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீறினால் சட்ட நடவடிக்கை

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷாரா

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட வீதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற வீதி திருத்த வேலைகள், வீதிகளைச் செப்பனிடும் பணிகள் போன்றவற்றை, நகர சபையின் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என்று, ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு வீதி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும் முதலில் நகர சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அவ்வாறு அனுமதியைப் பெற்ற பின்னர்தான் வீதி வேலைகளுக்கான பணிகளை முன்னெடுக்கவேண்டும். இதனை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, இது தொடர்பான அறிவித்தல்களை, பொது இடங்களிலும் ஏறாவூர் அனைத்து பள்ளிவாசல்களிலும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X