2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதலாவது சாரணர் படை கிழக்கில் உதயம்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்,க. விஜயரெத்தினம்

கிழக்கிலங்கையின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது சாரணர் படை, நேற்று முன்தினம் (03), சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், சின்னமும் சூட்டப்பட்டது.  

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கிழக்கு மாகாண சமூகச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம், விசேட தேவையுடையோர் சார்ந்து செயற்படும் அமைப்புகள் இணைந்து, மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருகின்றன.  

இதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டச் சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ யின் அனுசரணையில், இந்த 32 பேர் கொண்ட சாரணர் படை ஆரம்பிக்கப்பட்டு, சின்னஞ்சூட்டப்பட்டது.  

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, திருமதி ரோஹித்த போகொல்லாகம, விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்டச் சாரண சங்கத் தலைவருமான மா.உதயகுமார், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டச் சாரண ஆணையாளர் தேசகீர்த்தி விவேகானந்த பிரதீபன் தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சமூகத்தில் அவர்களுக்கும் அங்கிகாரம் வழங்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது சாரணர் படை உருவாக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் சாரண ஆணையாளர் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .