2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதலாவது பட்டமளிப்பு விழா

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, பல்கலைக்கழக கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (21) நடைபெற்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இப் பட்டமளிப்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் பட்டமளிப்பு விஷேட உரை நிகழ்த்தினார்.

இதன் போது, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவில் 17 பேரும், கணித அளவியலாளர் பிரிவில் 7 பேருமாக 24 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டன.

இவ் வைபவத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .