2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறையில் திடீர் மாற்றம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை விடுமுறையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின்2018ஆம் ஆண்டின் 2ஆம் தவணைக்கான விடுமுறை, எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கப்படவிருந்தது. அதற்குப் பதிலாக குறித்த தினத்துக்கு முன்னராகவே, எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டு, 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றன.

20ஆம் திகதிக்கு மாற்றீடாக செப்டெம்பர் 01ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் இடம்பெறுமென, கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

முஸ்லிம்கள், எதிர்வரும் 22ஆம் திகதி தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளைக் கொண்டாட விருப்பதைடுத்தே, 2ஆம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

விடுமுறைகளை முன்கூட்டியே வழங்குவதற்கு ஆவண செய்யவேண்டுமென, அஞ்சல் சேவைகள் மற்றும் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .