2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிளில் மக்கா செல்ல கோரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு, இலங்கையிலிருந்து முதல் தடவையாக மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து மோட்டார் சைக்களில் புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்வதற்கான அனுமதியைத் தருமாறு, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கான அனுமதியைக் கோரிய கோரிக்கை கடிதத்தை, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் அதன் அலுவலக் பொறுப்பதிகாரி அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.ஜுனைட் நழீமியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (11) ஒப்படைத்தார்.

“இதற்காக இலங்கை அரசாங்கம்,  சவுதி அரேபியா நாட்டு அரசாங்கம் அனுமதியைத் தரவேண்டும். ஹஜ்ஜுக்கான விண்ணப்பத்தை கடந்த ஆண்டு ஒப்படைத்தேன்.

“இதற்கான அனுமதியை, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தருவதுடன் ஆதரவையும் வழங்க வேண்டும். இதற்கான அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில் நான் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வேன்” என, ஊடகவியலாளர் எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து மக்காவுக்கு தரை வழியாக சுமார் 10,000 கிலோமீற்றர் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .