2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யானைகளின் அட்டகாசங்கள் அதிகரிப்பு

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.சுதாகரன் 

போரதீவுப்பற்று பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட எல்லைப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் மக்கள் தினமும் யானைகளின் அட்டகாசத்திற்கு உட்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசியல்வாதிகள்  மாத்திரமல்லாது அரச அதிகாரிகளும்  நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென பிரதேச பொது அமைப்புக்கள் கோரிக்கைகளை  முன்வைத்துள்ளன.

படுவான் கரைப் பிரதேச எல்லைக்  கிராமங்களான மாலையர்கட்டு,பூச்சிக்கூடு ,16ம் கிராமம் ,சின்னவத்தை,நெடியவட்டை,ஆணைகட்டியவெளி,காக்காச்சிவட்டை, 35ம் கிராமம் ,37ம் கிராமம் ,38ம் கிராமம் ஆகிய எல்லைக்கிராமங்களில் வாழ்கின்றமக்கள் தினமும் இரவுவேளைகளில் யானைகளின் அட்டகாசத்திற்கு உட்படுவதாக சுட்டிக்காட்டுவதுடன் கூட்டமாக வரும் யானைகள் வீட்டுத் தோட்டப் பயிர்களை சேதப்படுத்துவது மாத்திரமல்லாது உயிர்களையும் காவுகொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

 யானைப் பிரச்சினை தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் போது கோரிக்கைகள்  முன்வைக்கப்படுகின்ற போது அவை குறுகிய காலத்தினுள் நிறைவு பெறுவதாகவும்  மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இனிமேலும் பொறுமைகாக்காது யானைகளின்  அட்டகாசத்தினை நிறுத்துவதற்கு அரசியல் வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம்  கொடுக்கவேண்டும். வெறுமனேஅறிக்கைவிடுவதனைத் தவிர்த்து நேரடியாகஅழுத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து எல்லைப்பிரதேசமக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X