2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரூ. 1.2 பில்லியன் பெறுமதியான மானிய உரம் விநியோகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட பெரும்போகச் நெற்செய்கைக்காக இம்முறை தேசிய உரச் செயலகத்தால் 1.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான மானிய உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விசாயிகளுக்கான மானிய உர விநியோகம் சம்பந்தமாக அவர் இன்று (11) மேலும் கூறியதாவது, இம்முறை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கான மானிய உர விநியோகம் உரிய காலத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு, விநியோகம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றதாகத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், 2018 இறுதி மற்றும் 2019இன் ஆரம்பம் ஆகிய காலங்களை உள்ளடக்கிய பெரும்போகத்தில் 61 ஆயிரத்து 857 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இச்செய்கைக்கென, விவசாயிகளிடமிருந்து மானிய உர விநியோகத்துக்காக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில், மொத்தம் 17 ஆயிரத்து 234 மெற்றிக் தொன் யூரியா, ரீஎஸ்பி, எம்ஓபி ஆகிய உரங்கள் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

மாவட்டத்திலுள்ள 16 கமநல கேந்திர நிலையங்களில் விவசாயிகள் தமக்கான மானிய உரத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

அரசாங்கம் தற்போது 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாய்க்கு உர மானியமாக வழங்குகின்றது.

அதேவேளை, 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை சந்தையில்  1,500 ரூபாய்க்குப் பெற்றுக் கொள்தற்காக அரசு சலுகை அளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X