2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வன்முறைகளைத் தடுக்க உயர்மட்ட மாநாடு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 மார்ச் 20 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களிடையே அமைதியையும் சமாதானத்தையும் உண்டு பண்ணும் சர்வமத மற்றும் உயர் பொலிஸாருக்கிடையிலான உயர்மட்ட மாநாடு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் “நல்லியக்கத்தை ஒருமைப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இம்மாட்டில், இனமுறுகல்கள் ஏற்பாடாமல் தடுத்தல், சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துதல், சமாதான நடவடிக்கைகளை வலுபடுத்துல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இம்மாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாக்கொட ஆராச்சி பிரதேச செயயலாளர்கள் மாவட்த்தின 14 பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த ;தமிழ் முஸ்லிம் கத்தோலிக்க மதத்தலைவர்கள் சிவில்சமுக தலைவர்கள் அரசாங்க உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .