2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரட்சியால் சிறுபோகம் பாதிப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி நிலை காரணமாக, பெருமளவிலான நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதனால் சிறுபோக வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்துள்ளதாக, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின், மாவட்ட பிரதி ஆணையாளர் எம்.சிவலிங்கம் தெரிவித்தார்.

இம் மாவட்டத்தில் 420 சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளன.இவற்றுள் 200 குளங்களிலிருந்து செற்செய்கைக்கான நீர் பெறப்படுகின்றது.தற்போது நிலவும் வரட்சி காரணமாக,  இக்குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.இதனால் வயல்நிலங்களுக்கு நீரைப்பெறமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

இம் மாவட்டத்தில் கொக்கடிச்சோலை, வவுணதீவு வெல்லாவெளி, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் குளத்து நீரை நம்பி விவசாயிகள், சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X