2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்து போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று (21) காலை ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், கையெழுத்துப்பெறும் போராட்டமொன்றை முன்னெடுத்துவருகின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உடனடியாக அரச நியமனத்துக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டுமென வலியுறுத்தியே, இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தக் கையெழுத்துப்போராட்டம், நாளை (22) மாலை வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதில்  சேகரிக்கப்படும் கையெழுத்துகளையும் தமது கோரிக்கைகளையும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தெரிவித்தார்.

சமுர்த்திப் பயனாளிகள் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்களை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், எமது வேலையற்ற பட்டதாரிகள் கணக்கிலெடுக்கப்படாமலிருப்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தின் மீது தாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புவதாகவும் இதன்போது பட்டதாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,300க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் எனவும் பட்டதாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் காரணமாக, சிலர் வேலைவாய்ப்பை பெறும் வயதையும் கடந்து தொழில்வாய்ப்புப் பெறமுடியாத நிலையில் உள்ளனரெனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

அதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அரச நியமனங்களை வழங்க வேண்டுமெனவும் இல்லையெனில், பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரமளவில் கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட வேண்டி ஏற்படுமெனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .