2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வழக்கு ஒத்திவைப்பு

வா.கிருஸ்ணா   / 2018 மே 31 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்குடாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான், இன்று (31) உத்தரவிட்டார்.

பொலிஸாரால் இன்று (31) காலை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை, நீதிபதியால் வாசிக்கப்பட்ட போது, குற்றப்பத்திரிகையில் “வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தும் நோக்குடனும்” என்ற வசனம் இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும், அக்கருத்து முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும், அதைச் சரியான சட்டக் கோவைக்கு இணங்க சமர்பிக்குமாறும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த மாதம் இதே கருத்தையே நீதவான் முன்வைத்த போதும், பொலிஸாரின் அசமந்தப் போக்கு காரணமாகக் கோபமடைந்த அவர், சரியான முறையில் குற்றப் பத்திரிகையைச் சமர்பிக்குமாறு பொலிஸாருக்குக் கடும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தித் தொழிற்சாலை தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது, மார்ச் மாதம் 21ஆம் திகதி மதுபானசாலை உற்பத்தி நிலையத்திலுள்ள சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை ஞாபகப்படுத்தத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X