2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு முதலிடம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 27 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலக டெங்கு ஒழிப்புச் செயலணியுடன் இணைந்து, சுகாதார அமைச்சும் கல்வியமைச்சும் நடத்திய டெங்கு இல்லாத பாடசாலைப் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 14 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும் நடத்தப்பட்ட இப்போட்டியில், முதலாமிடத்தைப் பெற்ற இப்பாடசாலை, கிழக்கு மாகாணத்தில்  இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

மாகாண மட்டத்தில், முதலிடத்தை, தெஹியத்தண்டிய வித்தியாலயமும் இரண்டாமிடத்தை, திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியும் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .