2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விசமிகள் தீயிட்டதால் ‘கொக்குத்தீவு’ பறவைகள் சரணாலயம் தீக்கிரை

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷாரா

 

மட்டக்களப்பில் ‘கொக்குத்தீவு’ பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம், திங்கட்கிழமை பிற்பகல் விசமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகக் காணப்பட்டும் இந்த கொக்குத்தீவு பிரதேசம், மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது. 

தீச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய, பாலமீன்மடு பொலிஸார், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர், மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், கிராமிய மீனவ சங்கத்தினர் ஆகியோர் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதக் காலப்பகுதியில் அதிகளவிலான அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சரணாலயமாகவும், இதனை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் காணப்பட்டு வந்ததாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.


இச்சம்பவத்தால் இனப்பெருக்கத்துக்காக பறவைகள் இட்ட முட்டைகளும் பறவைக் குஞ்சுகளும் தீயில் கருகிச் சாம்பராகியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமும், மட்டக்களப்பு பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .