2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விசாரணைகளை முன்னெடுக்குமாறு அடையாள உண்ணாவிரதம்

வா.கிருஸ்ணா   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலஞ்ச, ஊழில்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று, நேற்று (06) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

“இலஞ்ச ஊழல் அற்ற சமூத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில், இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் மீதான இலஞ்ச, ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யக் கோரும் வகையிலான கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டன.

குறித்த பிரதேச செயலாளர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ள நிலையில், குறித்த முறைப்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில், பிரதேச செயலாளர் செயற்படுவதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இலஞ்ச, ஊழல்களை ஒழிக்கும் வகையில் ஜனாதிபதி முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே, தாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் இங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X