2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வித்தியாலயத்துக்கு புதிய கட்டட வசதிகள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“ஆசிரியர்களின், அதிபர், பிரதி அதிபர் ஆகியோரின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த வெகுமதியாகவே நான் இந்த 2 மில்லியன் 40 இலட்ச ரூபாய் செலவில் அமைந்த ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்துக்குக் கிடைத்த மாடிக் கட்டட வசதிகளைப் பார்க்கின்றேன்” என, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வி. மயில்வாகனம் தெரிவித்தார்.

“இதனால் தற்போதைக்கு  சுமார் 300 மாணவர்களும், இன்னும் சில மாதங்களில் அடுத்த மாடிக்கட்டட நிர்மாணம் பூர்த்தியானதும் 450 மாணவர்களும் பயிலக் கூடிய நவீன மாடிக் கட்டட வசதி கிடைக்கப்பெற்றுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத் திறப்பு விழா, பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் தலைமையில், பாடசாலை வளாகத்தில் நேற்று (03)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் என். இராஜதுரை உட்பட  ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .