2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விருட்சம் வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டது

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காமாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் வீட்டுத்திட்டம், நேற்று (13) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. 

வீடமைப்பு அதிகாரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் என்பன இணைந்து உருவாக்கியுள்ள இந்த விருட்சம் மாதிரிக் கிராமத்தில், சகல வசதிகைளயும் கொண்டதாக 29 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் 106ஆவது வீட்டுத்திட்டமான இந்த வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 220 வீட்டுத்திட்டங்களை அமைக்கவுள்ளதாகவும் 70 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.  

மேலும், 150 வீட்டுத்திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அதேபோன்று, 2019ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 வீட்டுத்திட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

அதற்காக, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீடமைப்பு அதிகாரசபையின் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு, அதிகாரிகளையும் அவர் பணித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .