2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு வீதி நாடகம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை மாஞ்சோலை கிராமத்தில், “மத சுதந்திரத்திரமுடைய கலாசாரத்தை உருவாக்கும் பரிந்துரை செயற்பாடு” எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு வீதி நாடகமொன்று, இன்று (10) நடைபெற்றது.

எதிர்கால அபிவிருத்திற்கான உள்ளூர் முனைப்பு அமைப்பின் ஏற்பாட்டில், அதன் வெளிக்கள இணைப்பாளர் வி.தயாநிதி தலைமையில், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் இந்த வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டது.

 மதங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தவிர்த்தல், இன நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பான செய்தியை உள்ளடங்கியதாக, இந்த வீதி நாடகம் அமைந்திருந்தது.

மத சுதந்திரத்தின் முக்கியத்துவம், மதங்களின் மதிப்புகள், மதங்களின் கலாசாரங்களைக் கொண்டாடுதல், மதங்களுக்குரிய மரியாதை, இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான சட்டங்கள் போன்ற கருத்துகள் உள்ளடங்கியதாக, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் நாடகம் நிகழ்த்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .