2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

வா.கிருஸ்ணா   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸவின் “150 வீட்டுத் திட்டங்களை உருவாக்குதல்” எனும் தொனிப்பொருளில் நிர்மாணிக்கப்படவுள்ள பலாச்சோலை கிராம வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் களுவன்கேணி வட்டார உறுப்பினர் வே.பரமதேவா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராசசிங்கம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் நா.கதிரவேல், பிரதித் தவிசாளர் கா.இராமசந்சந்திரன், வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு முகாமையாளர் க.ஜெகநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

65 வீடுகளை உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ்வீட்டுத் திட்டத்தில், மேலும் 10 வீடுகள் உள்ளடக்கப்பட்டு 03 கிராமங்களாக உருவாக்கப்படவுள்ளன.

1996ஆம் ஆண்டில், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவரின் முயற்சியினூடாக மேற்கொள்ளப்பட்ட இவ்வீட்டுத் திட்டம், பல்வேறு தடைகளால் நிறைவேற்றப்படாமல், தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இது உள்வாங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, களுவன்கேணி பிரதேசத்தில் 25 வீடுகளை உள்ளடக்கிய வீட்டுத் திட்டமும் இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .