2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் நாளை மறுதினம் கையளிப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 07 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில், 2 வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவால், நாளை மறுதினம் (09) திறந்து வைக்கப்படவுள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் மா.ஜெகநாதன் தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின், சவுக்கடி கிராம சேவையாளர் பிரிவில் 26 வீடுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள 177ஆவது வீட்டுத்திட்டமான கற்பகதரு கிராமம், 24 வீடுகளைக் கொண்டதாக அமைந்துள்ள 178ஆவது வீட்டுத்திட்டமான நெய்தல் கிராமம் ஆகியனவே, நாளைக் காலை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், திணைக்களத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வீடற்ற மக்களின் வீட்டுத் தேவையை நிவர்த்தி செய்து, நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கை அடிப்படையாகக் கொண்ட “செமட்ட சவன” (யாவருக்கும் வீடுத் திட்டம்), வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய முட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 11 வீட்டுத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .