2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படும் மீன்கள் பரிசோதனை

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, வெளிமாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படும் மீன்களின் தரத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையை,  கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர், இன்று(2) வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள, வெளிமாவட்டங்களுக்கு, மீன்கள் ஏற்றுமதி செய்யும் விற்பனை நிலையங்களில், மீன்களின் தரததை உறுதி செய்யும் வகையில் பரிசோதனைகள் இதன்போது இடம்பெற்றன.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கானின் வழிகாட்டலில், பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதர் இ.இன்பராஜ் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களால், இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு மீன்களை வியாபாரத்துக்கு வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும் நபர்கள், மீண்டும் பிரதேசத்துக்கு வருகை தந்த பின்னர், பதினான்கு நாள்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமானது என, மீனவர்களுக்கு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் பணிப்புரை விடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .