2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வேலைவாய்ப்பு, நுண்கடன் பிரச்சினைகள் தீரும்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் கம்பெரலிய, கிராம சக்தி, என்ரபிறைஸ் சிறிலங்கா போன்ற திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தினால், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுடைய பிரச்சினைகள் தீரும், நுண்கடன் மூலம் சிரமப்படும் மக்களைப் பாதுகாக்க முடியுமென்று, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கிராம அபிவிருத்தி பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள், பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களுடன், நேற்று (31)  நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கென புதிதாக நியமனம் பெற்றுள்ள மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தியும் பிரசன்னமாகியிருந்தார். அவரது முதலாவது கூட்டம் என்றவகையில் அவருக்கு அரசாங்க அதிபர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய, கம்பெரலிய கிராமபுரட்சி விசேட அபிவிருத்தித் திட்டத்தை மட்டக்களப்பில் விரைவுபடுத்தப்படவுள்ளது. கம்பெரலிய கிராமபுரட்சி விசேட அபிவிருத்தித் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவாக அமுல்படுத்த தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமரும் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய இந்நடவடிக்கை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் வழிகாட்டுதலில் விரைவுபடுத்தப்படவுள்ளது.

ஒரு தேர்தல் தொகுதிக்கு 200 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பிலான  அறிவுறுத்தல்களை, பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு அரசாங்க அதிபர் வழங்கினார்.

இத்திட்டங்கள், எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X