2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘வைத்தியசாலைகளை அரசியல் தளங்களாக மாற்ற வேண்டாம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 மார்ச் 26 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வைத்தியசாலைகளை அரசியல் களங்களாக மாற்றிவிட வேண்டாமென, உள்ளூர் அரசியல்வாதிகளுக்குத் தான் உருக்கமான வேண்டுகோளை விடுப்பதாக, கிழக்கு மாகாண முன்னாள்  சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (26) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சுகாதாரத் துறையினருக்கும் நோயளிகளுக்கும் இடைஞ்சல் ஏற்படாத வண்ணம், எந்தவோர் அரசியல்வாதியும் தம்மாலான அபிவிருத்திகளை வைத்தியசாலைகளின் முன்னேற்றத்துக்காகக் கொண்டுவர வேண்டுமென்றார்.

அத்துடன், மற்ற அரசியல்வாதிகள் கொண்டு வரும் அபிவிருத்திகளையும் வரவேற்கும் சிறந்த கனவான் அரசியல் சம்பிரதாயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.  

அதனை விடுத்து, தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்து, மற்ற அரசியல்வாதிகளைத் தூற்றிப் பேசி கிடைக்கக் கூடிய அபிவிருத்திகளைத் தடை செய்யும் அற்ப அரசியல் போக்கை எவரும் கைக்கொள்ளக் கூடாதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X