2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஹிஸ்புல்லாஹ்வின் மேடையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் பிரசார மேடைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியூடாக உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டத் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வாறு அமர முடியுமெனக் கேள்வியெழுப்பிய கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிப்லி பாறூக், ஹிஸ்புல்லாஹ்வுக்கும்  கோட்டாவுக்கும் மறைமுக உடன்பாடு உள்ளது இதனூடாகத் தெளிவாகின்றதென்றார்.

 ஜனதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து காத்தான்குடியில் நடைபெற்ற கூட்ட மொன்றில் (23 ) கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிப்லி பாறூக் உரையாற்றினார்.

மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

 தனக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லை யென வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் கூறிவருவது, மக்களை மடையர்களாக மாற்றும் செயல்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தத் தேர்தலில் கோட்டாய ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது. அப்படியாயின், கோட்டாவை எதிர்த்து தேர்தலில் நிற்கின்ற ஹிஸ்புல்லாஹ்வுக்கு எவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நேரடியாக ஆதரவு வழங்க முடியும்?.
இனவாத ரீதியாக முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றிய கோட்டாவை வெற்றி பெறச் செய்யவே மறைமுகமாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கியுள்ளார் என்பது நாடறிந்த விடயம். நேரடியாகச் சொன்னால் முஸ்லிம்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதால் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்காமல் தடுத்தால் கோட்டா வெற்றியடைவார்.  இதுவே ஹிஸ்புல்லாஹ்வின் கனவாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .