2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக் கொண்டே வந்து சரிந்த நிலையில் உள்ளங்கைகளில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெறவும்.

பின்னர் இரண்டு கால்களையும் விரைப்பாக நீட்டி வைத்து நன்றாக சுவாசிக்கவும். பின்னர் நீட்டிக் கொண்டிருந்த கால்களை இரண்டையும் முழங்கால்களை மடக்காதபடி நன்றாக நடப்பது போன்று அசைக்கவும்.

பின்னர் இரண்டு கால்களையும் இரண்டு வட்டங்கள் வரைவது போன்று இடவலம், வலது இடம் என்று மாற்றி மாற்ற் சுழற்றவும். பின்னர் இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து மடக்கி மடக்கி நீட்டவும்.

கைகளில் தாங்கிப் பிடிக்க முடியவில்லை எனில் சுவற்றில் கால்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தலைகாணியை எடுத்து பக்கபலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பலன்கள்

நரம்பு மண்டலம் தூண்டப்படுவதால் உற்சாகம் கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். கால்வலி குணமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .